தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-09-22 10:34 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி குளத்துமேட்டுத் தெரு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டனர். கால்வாயை விட தெரு பள்ளமாக இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியால் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் ஓரம் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விரைவில் தெருவை உயர்த்தி சாலை அமைக்க வேண்டும், எனக் கேட்டுக்கொள்கிறோம்.

-ஜெயசீலன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்