தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-08-24 11:24 GMT

ஏலகிரிமலையில் நிலாவூர் பகுதிக்கு செல்லும் சாலையில் சாலையோரம் மரக்கன்றுகள், செடி, கொடிகள், புதர் வளர்ந்து காணப்பட்டது. அவை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் ஏலகிரிமலையில் நிலாவூர் பகுதியில் சாலையோரம் வளர்ந்திருந்த மரக்கன்றுகள், செடி, கொடிகள், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறைக்கும் நன்றி.

ரவிக்குமார், நிலாவூர்

மேலும் செய்திகள்