தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-07-19 12:26 GMT

வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. சாய்பாபா கோவில் அருகில் சில இடங்களில் சில மாதங்களாக மழைப்பெய்ததால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளங்களால் சிரமப்படுகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளை ஒரே சீராக சமன்படுத்தி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வாலாஜா. 

மேலும் செய்திகள்