வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோட்டில் பஸ் நிலையம் முதல் மதுபானக்கடை வரை தார் சாலை மிகவும் மோசமான நிலையில் மேடும் பள்ளமுமாக உள்ளது. தபால் நிலையம் அருகில் மிக மோசமாக பழுதடைந்த நிலையில் தார் சாலை உள்ளது. இதனால் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருவோர் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலை அமைப்பார்களா?
-நரசிம்மன், வாலாஜா.