ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார் சாலை

Update: 2025-03-30 19:40 GMT

கண்ணமங்கலம் அருகே படவேடு ஊராட்சியில் சாமந்திபுரம் கிராமத்தில் செண்பகதோப்பு அணை செல்லும் ரோட்டில் தார் சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால், தார் சாலை பெயர்ந்து மண் சாலையாக காட்சி அளிக்கிறது. அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்தெடுத்து, புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்