வேலூர் மாவட்டம் பாகாயத்தில் இருந்து அ.கட்டுபடி கிராமம் வரை உள்ள சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. இதைப் புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவர் சாலையில் எனது பட்டா இடம் உள்ளது எனக் கூறி சாலையில் கல்லை நட்டுவைத்து ஆக்கிரமிப்பு செய்ததுடன் பணி நடக்காமல் தடுத்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகள் சென்று தட்டிக்கேட்டால், அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி அச்சுறுத்தி வருகிறார். இதனால் அதிகாரிகள் அவர் வீடு இருக்கும் இடத்தை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் சாலை அமைக்கப்பட்டது. பிரச்சினைக்கு உரிய இடம், இதுநாள் வரை சாலை அமைக்கப்பட்டாமலே உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வேண்டும்.
-ரகுராமன், பாகாயம்.