நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-19 16:20 GMT

வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே பில்டர்பெட் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதுபோக பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நடைபாதையில் ஒரு சிலர் நிரந்தரமாக கடை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதை வழியாக செல்ல முடியாமல் சாலையில் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் நிரந்தரமாக வைத்துள்ள கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.(படம்) நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்