கரடு முரடான சாலை

Update: 2023-02-12 16:41 GMT

கந்திலி ஒன்றியத்தில் ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள எர்ராம்பட்டி முதல் காவேரிப்பட்டினம் ரோடு வரை இணைக்கும் சாலையும், சொளச்சூர் முதல் ஜி.டி.குப்பம் வரை உள்ள 2 சாலைகளும் மிகவும் மோசமாகவும், குண்டும், குழியுமாகவும் கரடு முரடாக காட்சி அளிக்கிறது. அந்த சாலைகளில் சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேற்கூறிய 2 சாலைகளையும் உடனடியாக தார்சாலை அமைத்துத் தர புதிய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜமாணிக்கம், கந்திலி.

மேலும் செய்திகள்