சாலையோர செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-22 08:52 GMT

ராணிப்பேட்டையில் இருந்து சிப்காட் நோக்கி செல்லும் சாலை மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். எம்.பி.டி சாலை எனப்படும் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் என 4 மாநிலங்களை இணைக்கும் சாலையாகும். இச்சாலையில் வாகனங்கள் எப்போதும் சென்று கொண்டே இருக்கும். ராணிப்பேட்டையில் இருந்து சிப்காட் வரை இரு புறமும் செடி, கொடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டு உள்ளது. இதனால் பஸ்கள், லாரிகள், கார்கள் சைடு மாறி செல்லும்போது செடி, கொடிகள் இடையூறாக உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற ேவண்டும்.

ஞானசேகரன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்