ஆரணி தாலுகா கண்ணமங்கலத்தில் கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் கண்ணமங்கலத்தில் இருந்து வண்ணாங்குளம், சந்தவாசல் வரை ஆக்கிரமித்துக் கடைகள், கட்டிடங்கள் கட்டி உள்ளனர். மேலும் சிலர் சாலையோரம் தட்டிகள் கட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.எம்.சாமி நாதன், கண்ணமங்கலம்.