சாலையோரம் வடிகால் வசதி தேவை

Update: 2022-08-28 09:43 GMT

திருவண்ணணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் மங்களூரு-தூத்துக்குடி நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் அமைந்துள்ள கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் மழை பெய்யும்போது மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. சாலையில் ஆங்காங்ேக தேங்கி குளம்போல் உள்ளது. இச்சாலை ஓரம் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்தியசீலன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்