சாலையோரம் பள்ளம்

Update: 2022-08-19 11:32 GMT

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இந்தப் பள்ளத்தையொட்டி கால்வாய் அமைந்துள்ளது. கால்வாய் மேற்பகுதியை நடைபாதையாகப் பயன்படுத்தி வருகின்றனர். பாதசாரிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அந்தப் பள்ளத்தில் தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜித், திருவண்ணாமலை 

மேலும் செய்திகள்