சாலைகள் ஆக்கிரமிப்பு

Update: 2024-07-21 20:36 GMT

வாலாஜாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு சாலை எவ்வளவு அகலம் இருந்ததோ அதே அளவு தான் இன்று வரை உள்ளது. ஒரு சில இடங்களில் சாலை ஆக்கிரமிப்பு உள்ளது. அதில், வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையிலும், பஸ் நிலையம் முதல் பத்திரப்பதிவு அலுவலகம் வரையிலும் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்பை அகற்றி சாலைகளை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேந்திரன், வாலாஜா.

மேலும் செய்திகள்