தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது எடக்கல் கிராமம். இந்தப் பகுதியில் இருந்து பேராயம்பட்டு செல்லும் சாலை உள்ளது. அந்தச் சாலை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிப்பார்களா?
-சிவக்குமார், பேராயம்பட்டு.