கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-08-18 20:05 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் அந்தப் பகுதியில் சாலை அமைக்க 3 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால், இன்னும் தார் சாலை அமைக்கவில்லை. பணியை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-உமாராணி, சோமநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்