சாலை அமைக்க வேண்டும்

Update: 2024-09-29 19:56 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் பல தெருக்கள் உள்ளன. இந்தத் தெருக்களில் சிமெண்டு சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் 4-வது தெருவில் இருந்து 100 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அந்தப் பகுதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் காணப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.

-குமார், வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது