வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து அங்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.