சாலை அமைக்க வேண்டும்

Update: 2024-01-07 17:05 GMT

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே ஜவுளிக்கடை பக்கத்தில் உள்ள தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து முடிந்தது. ஆனால் இப்போது அந்தப் பகுதியில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் அங்கு சிமெண்டு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருச்செல்வன், வேலூர்.

மேலும் செய்திகள்