வேலூர் சத்துவாச்சாரி மூலக்கொல்லை பகுதியில் இருந்து செங்கானத்தம் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் சாலையே இல்லாத அளவுக்கு பெயர்ந்து கிடக்கிறது. அந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் தினமும் வந்து செல்வதால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.