திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் கிராமத்தில் ஒரு கிேலா மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க, ஏற்கனவே இருந்த தார் சாலையை பெயர்த்தெடுத்து ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டு முரம்புமண் கொட்டப்பட்டது. தார் சாலை அமைக்க தயாராக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டு வெள்ளத்தில் முரம்புமண் அடித்துச் செல்லப்பட்டது. அதில் ஜல்லிக்கற்கள் மட்டும் எஞ்சி உள்ளது. ஆனால் சாலை அமைக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிதாக சாலை போடும் பணிைய தொடங்கி முடிக்க வேண்டும்.
-சி.மாணிக்கம், பெரியாங்குப்பம்.