கீழ்பென்னாத்தூர் சிவன் கோவில் அருகே 2 ரேஷன் கடைகள், 2 கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. வருவாய் ஆய்வாளர் அலுவலகமும் உள்ளது. அங்குள்ள சாலை பழுதடைந்து மோசமாக உள்ளது. கற்கள் பெயர்ந்து மக்கள் நடந்து செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.செந்தில், கீழ்பென்னாத்தூர்.