சாலை பள்ளங்களை சரி செய்ய வேண்டும்

Update: 2022-09-16 16:46 GMT

ராணிப்பேட்டையில் இருந்து காரை கூட்ரோடு செல்லும் வழியில், இப்போதைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சாலையைச் சீா் செய்ய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்போது மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், ராணிப்பேட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்தச் சாலை வழியாகத்தான் இப்போது செல்கின்றன. இதனால் இச்சாலை வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் தனியார் பள்ளி ஒன்றும் இதன் அருகே அமைந்துள்ளதால், மாணவர்கள் இச்சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே விரைவில் இந்தப் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்