திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் காலனியில் 100 குடும்பங்கள் உள்ளன. அந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லை. அதேபோல் இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு எடுத்துச்செல்ல சாலை வசதி இல்லை. கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-கே.மூர்த்தி, செவாத்தூர் புதூர்.