வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர் பாலமுருகன் தெருவில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்தத் தெருவில் 7 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி பலமுறை மனு கொடுத்துள்ளனர். தற்போது ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் இருந்தும் இதுவரை அந்தத் தெருவுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. எனவே நீண்டகால கோரிக்கையான சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-தமிழ்ச்செல்வன், வாலாஜா.