வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பேஸ்-2, மண்டலம் -2, வார்டு-23, 59வது தெருவில், சாலை போடுவதற்காக பல மாதங்களுக்கு முன்பு இருக்கின்ற சாலை தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை சாலை போடப்படவில்லை. குண்டும் குழியுமாக சாலை இருப்பதினால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். அடிக்கடி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இச்சாலையை உடனடியாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.குணசேகரன், சத்துவாச்சாரி, வேலூர்.