வாலாஜா கோனேரி தெரு, அணைக்கட்டு ரோடு பகுதிகளில் இருபுறமும் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் முழுமையாக அகற்றப்படவில்லை. தற்போது சாலைகளின் இருபுறமும் பலவித ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன. சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். கடைகள் முன்பு பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர். சாலைகளில் மக்கள் நடமாடும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ஸ்ரீதர், வாலாஜா.