வாலாஜாபேட்டையில் அணைக்கட்டு ரோடு உள்ளது. நான்கு சாலைகள் சந்திக்கும் இந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகலாக உள்ளது. சாலையின் இரு பக்கமும் உள்ள நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவேந்திரன், வாலாஜா.