குண்டும், குழியுமான சாலை
திருப்பூர் யூனியன் மில் ேராடு ரவுண்டானா பகுதியில் தார்ச்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். குறிப்பாக மழைகாலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சில நேரங்களில் குண்டும் குழியுமான சாலையில் தவறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள். இதுபோல் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் இருந்து தாராபுரம் சாலையில் இணையும் பகுதியிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபு, திருப்பூர்.