சாலை சேதம்

Update: 2025-03-02 19:37 GMT

கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் கிராமத்தில் மந்தைவெளி முதல் சிங்கிரிகோயில் வரை செல்லும் 5 கிலோ மீட்டர் தூர சாலையில் தினமும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இச்சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது மண் சாலையாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சம்பத், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்