சாலை சேதம்

Update: 2022-11-16 11:54 GMT

வேலூரில் இருந்து அணைக்கட்டு வழியாக வரதலம்பட்டு, கீழ்கொத்தூர், அப்புக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒடுகத்தூரில் இருந்து கீழ்கொத்தூர் வரதலம்பட்டு வழியாக வேலூருக்கு செல்ல தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் பெரும்பாலான கிராம சாலைகள் நாசமாகி உள்ளது. குறிப்பாக வரதலம்பட்டு மெயின் ரோட்டில் 200 முதல் 300 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை உடைந்து பழுதாகி உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினகரன், அப்புக்கல். 

மேலும் செய்திகள்