சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-13 17:25 GMT

சாலை சீரமைக்கப்படுமா?

திருப்பூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூ மார்க்கெட், காய்கறி கடைகள், மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் இருந்து அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் வாகனஓட்டிகள் மிகவும் அவதியடைகிறார்கள். மழைக்காலங்களில் குண்டும், குழியுமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தசாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

-செந்தில், திருப்பூர்.

மேலும் செய்திகள்