சிமெண்டு சிலாப் உடைப்பு சரி செய்ய வேண்டும்

Update: 2022-08-12 10:42 GMT

வேலூர் தோட்டப்பாளையம் எல்.ஐ.சி. காலனி மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் கான்கிரீட்டால் ஆன சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தச் சிமெண்டு சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்தச் சிலாப்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக இரவில் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலவன், தோட்டப்பாளையம் 

மேலும் செய்திகள்