வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் இருந்து கோர்ட்டு வழியாக வள்ளலார் செல்லும் சவுத் அவென்யூ சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பணிகள் முடிந்து சாலையும் அமைக்க பட்டு விட்டது. சாலை அமைக்கும் முன்பே, இந்தச் சாலையில் கோர்ட்டுக்கும், ஆர்.டி.ஓ. சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருந்ததைச் சரி செய்யப் படாமலேயே சாலை அமைக்கப்பட்டது. இதனால் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு உள்ளதால், பணிகள் முடிக்கப்பட்ட சாலையை மீண்டும் உடைத்து குழாயை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி கவனிக்குமா?
-செல்வநாதன், வேலூர்.