திருப்பத்தூர் புதுக்கோட்டை சாலையில் இருந்து வீரபத்திரசாமி கோவில் வட்டம் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்தப் பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பழகன், திருப்பத்தூர்.