சாலையில் பள்ளம்

Update: 2023-05-24 12:08 GMT

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் இருந்து பாலாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளம் மாத கணக்கில் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரவில் மோட்டார் சைக்கிளில் வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்