சாலையில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி

Update: 2022-09-07 17:43 GMT

காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய பைரா காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததாலும், மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்குவதாலும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் முறையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

-சுரேஷ், பாணாவரம்.

மேலும் செய்திகள்