வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் 2, 6-வது தெருக்களில் சாலை போட முன்னேற்பாடு பணி நடந்தது. அந்தப் பணியை முடித்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் சாலை பணியை தொடங்கவில்லை. அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். சாலை போடாமல் வாட்டி வதைக்கும் மாநகராட்சி நிர்வாகம் சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேஸ்வரன் செல்லப்பன், சத்துவாச்சாரி.