வேலூர் வடக்குக் காவல் நிலையம் அருகே டவுன்ஹால் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயின் மேற்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக கான்கிரீட் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு பகுதியில் கான்கிரீட் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.