நடைபாதை சேதம்

Update: 2024-10-06 21:07 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள வீரபத்திரர் கோவில் அருகே பயணிகள் நடந்து செல்லும் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் உள்ள கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், வேலூர். 

மேலும் செய்திகள்