உடைந்த நிலையில் நடைபாதை தடுப்பு கம்பிகள்

Update: 2023-09-13 11:50 GMT

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சிநகரில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் உடைந்து கிடக்கிறது. இதேபோல் சவுத் அவன்யூ சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் உடைந்து காணப்படுகிறது. சில இடங்களில் மதுகுடிப்பதற்காக அந்த கம்பிகளை மர்மநபர்கள் திருடி விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சத்துவாச்சாரி செவிடாத்தமன் கோவில் எதிரே உள்ள மெயின் தெருவில் தடுப்பு கம்பிகள் உடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆல்பர்ட், வேலூர்.

மேலும் செய்திகள்