வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படும் வகையில் சாலையோரம் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சாலையோரம் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். மேலும் தேவையில்லாமல் சாலையோரம் நிற்கும் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஒதுக்குப்புறமாக நிறுத்த நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் அறிவுறுத்த வேண்டும்.
-தணிகை வேலன், வேலூர்.