திருப்பத்தூர் அருகே தோரணம்பதியில் இருந்து காக்கங்கரை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்தச் சாலையில் இருபுறமும் செடி, கொடிகள், முட்செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
-மூர்த்தி, செவ்வாத்தூர்.