சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் -மலம்பட்டி சாலையில் இருந்து ஒக்கூர், புதூர் ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு பிரிந்து செல்லும் சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.