கொடுமுடி ஒன்றியம் எழுநூற்றிமங்கலம் ஊராட்சி குப்பம்பாளையம் மேற்கு வீதியில் உள்ள சாலை குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. எனவே குப்பம்பாளையம் மேற்கு வீதியில் உள்ள பழனியாண்டவர் கோவில் முதல் சென்னசமுத்திரம் வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.