அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பெட்ரோல் நிலையம் எதிரே உள்ள கைலாசபுரம் சாலையில் இருந்து வீரபோகம் கிராமம் வரை செல்லும் தார்சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் முதியவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுவதுடன், அவசர காலங்களிலும் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.