மதுரை கோச்சடை அசோக் நகர் 3-வது தெருவில் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டன. தற்போது குழாய்கள் பகுதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலை மேடு, பள்ளங்களாக காணப்படுவதுடன் பதிக்கப்பட்ட சில குழாய் இணைப்புகளில் நீர் கசிவு ஏற்பட்டு பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைவதுடன், கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?