மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியில் இருந்து கோவில் பாப்பாக்குடி மற்றும் பொதும்பு செல்லும் முக்கிய சாலையில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் அன்றாடம் இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழை காலத்தில் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இதனை அறியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சாலையை சீரமைக்காமல் அவ்வப்போது பள்ளத்தில் மண்ணை கொட்டி சென்றுவிடுகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையில் பள்ளத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.