விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலையில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மேற்கண்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?