ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2026-10-11 13:48 GMT

கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முருக்கம்பட்டி கிராமத்திற்கு கம்பைநல்லூரில் இருந்து ஒடசல்பட்டி செல்லும் பிரதான சாலையில் முருகர் கோவில் வழியாக தார்சாலை செல்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த தார்சாலை சேதமாகி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், மேடு பள்ளமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்