கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் அவை வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் வேகத்தடைகளில் ஏறும்போது வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசி, விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.